நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட 20 பேர் போட்டியின்றி தேர்வு..!

அதேபோல, தாராபுரம் தாலுகாவில் மொத்தம் 5 பேரூராட்சிகள் உள்ள நிலையில், 4 பேரூராட்சிகளில் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி உட்பட 20 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

இதில் உடுமலை நகராட்சியில் ஒருவரும், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 13 பேர், மடத்துக்குளம் பேரூராட்சியில் ஒருவர், கொளத்துபாளையம் பேரூராட்சியில் ஒருவர், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பேர், மூலனூர் மற்றும் முத்தூர் பேரூராட்சிகளில் தலா ஒருவர் என மேற்கண்ட பேரூராட்சிகளில் 19 பேரும் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 20 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் மொத்தம் 5 பேரூராட்சிகள் உள்ள நிலையில், 4 பேரூராட்சிகளில் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 13 வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-

(1) திருமதி பி.செல்வி,1வது வார்டு தேவநல்லூர், திமுக வேட்பாளர்

(2) திருமதி.கே செல்வி 2வது வார்டு, கொட்ட முத்தாம்பாளையம், திமுக வேட்பாளர்

(3) திருமதி .மருதீஸ்வரி சோமனூத்து, 4வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி (திமுக கூட்டணி வேட்பாளர்)

(4) திரு.ஆர். கோவிந்தராஜ் 5வது வார்டு சீலநாயக்கன்பட்டி திமுக வேட்பாளர்

(5) திருமதி.செ. கன்னீஸ்வரி 6வது வார்டு சின்னக்காம்பாளையம் திமுக வேட்பாளர்

(6) திருமதி.ஆ. மீனாட்சி 8வது வார்டு சிக்கினாபுரம் திமுக வேட்பாளர்

(7)திருமதி.வெ. கமலம் 9வது வார்டு செலாம் பாளையம், சுயேட்சை வேட்பாளர் (திமுக ஆதரவு)

(8) திரு பிரதாப் மூர்த்தி 10வது வார்டு செலாம் பாளையம், திமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர்கள்

(9)திரு சிவகுமார் 3,வது வார்டு அதிமுக வேட்பாளர்

(10)திரு,சுரேஷ்குமார், 11வது வார்டு அதிமுக வேட்பாளர்.

(11)திருமதி முருகன்பால் 13,வது வார்டு அதிமுக வேட்பாளர்

(12)திருமதி பிரியங்கா 14வது வார்டு அதிமுக வேட்பாளர்.

(13)திருமதி மகேஸ்வரி 15-ஆவது வார்டு அதிமுக வேட்பாளர்.

போட்டியின்றி தேர்வான எட்டு வேட்பாளர்களில் 6 பேர் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியில்1, சுயேச்சை வேட்பாளர்-1, அதிமுகவில் 5 வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்திராவதி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் விபரம் வருமாறு

1- திருமதி .வேலுமணி, 8வது வார்டு சுயேட்சை வேட்பாளர்

2- திருமதி சுமதி 14வது வார்டு அதிமுக வேட்பாளர்

இதேபோல், மூலனூர் ஊராட்சி ஒன்றியம் மூலனூர் பேரூராட்சியில் 12 வது வார்டில் கலாவதி ராமநாதன் சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், கொளத்துபாளையம் பேரூராட்சியில் 17வது வார்டு தேன்மொழி நாகராஜ் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல், உடுமலை நகராட்சியில் 14வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருமதி மும்தாஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர் சாய்ரா பேகம் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார்.

மடத்துக்குளம் பேரூராட்சியில் 11வது வார்டு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்பொழுது மதிமுகவை சேர்ந்த திருமதி சிவமணி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் முத்தூர் பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மணிமேகலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...