கோவை மாவட்டத்தில் 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு ஆரம்பம்; ஜி.சி.டி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..

கோவை மாநகராடசியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது. கோவை மாநகரில்  2400 போலீசாரும், புறநகர் பகுதியில்  1460 போலீசாரும் என மொத்தம் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.



கோவை: கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றஉள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி,7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு, கடந்த 19 அமா தேதி நடைபெற்றது. இதையடுத்து, இன்று 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 



அதன்படி, கோவை மாநகராடசியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது. கோவை மாநகரில்2400 போலீசாரும், புறநகர் பகுதியில்1460 போலீசாரும் என மொத்தம் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



வாக்கு எண்ணிக்கை அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் படி அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் முககவசம் கட்டாயம் அணிதிருக்க வேண்டும்.



இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையானது தொடங்கவுள்ளது. மாநகராட்சி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை, ஒவ்வொரு கட்டமாக, 10 வார்டுகளுக்ககான வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும். பின்னர், அடுத்த 10 வார்டுகள் என்று எடுக்கப்பட்டு, எண்ணிக்கையானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, முதல் ரவுண்டில் வார்டு 13, 4, 5, 7, 87, 76, 71, 37, 62 மற்றும் 31 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.ஒரே சுற்றில் 73 வார்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். பின்னர் அடுத்த 26 வார்டின் முடிவுகள் இரண்டு சுற்றுகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும். ஆனால், 81 வது வார்டுக்கு மட்டும் 3 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...