கோவை மாநகராடசியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது. கோவை மாநகரில் 2400 போலீசாரும், புறநகர் பகுதியில் 1460 போலீசாரும் என மொத்தம் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
கோவை: கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றஉள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி,7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு, கடந்த 19 அமா தேதி நடைபெற்றது. இதையடுத்து, இன்று 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
அதன்படி, கோவை மாநகராடசியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது. கோவை மாநகரில்2400 போலீசாரும், புறநகர் பகுதியில்1460 போலீசாரும் என மொத்தம் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் படி அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் முககவசம் கட்டாயம் அணிதிருக்க வேண்டும்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையானது தொடங்கவுள்ளது. மாநகராட்சி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை, ஒவ்வொரு கட்டமாக, 10 வார்டுகளுக்ககான வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும். பின்னர், அடுத்த 10 வார்டுகள் என்று எடுக்கப்பட்டு, எண்ணிக்கையானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் ரவுண்டில் வார்டு 13, 4, 5, 7, 87, 76, 71, 37, 62 மற்றும் 31 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.ஒரே சுற்றில் 73 வார்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். பின்னர் அடுத்த 26 வார்டின் முடிவுகள் இரண்டு சுற்றுகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும். ஆனால், 81 வது வார்டுக்கு மட்டும் 3 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.