திருப்பூரில் சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து - 17 வயது மாணவன் உயிரிழப்பு..!

மேலும், படுகாயமடைந்த 4 பேர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: திருப்பூரில் சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலை அம்மா பாளையம் பிரிவு அருகே பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தமிழ்வாணன் (16), தினேஷ் (17), ஸ்ரீ (15), கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17), ஹரிகிருஷ்ணன் (17) ஆகிய 6 பேரும் தமிழ்வாணினின் உறவினருக்கு சொந்தமான இண்டிகா காரில் மங்கலம் நோக்கி சென்றுள்ளனர்.

அம்மாபாளையம் பகுதியை கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியில் பின்புறமாக அதி வேகமாக மோதி அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது.



இதில் காரில் பயணித்த தமிழ்வாணன் 16 சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். உடன் இருந்த ஐந்து பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் பலியான தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த ஐந்து பேரில் மேலும் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...