கோவை காந்திபுரத்தில் வணிக வளாகத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து பெண் பலி

காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்ற பெண் படிக்கட்டில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்ற பெண் படிக்கட்டில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுமதி (வயது 47). இவர்பொருட்கள் வாங்குவதற்காக காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள "Celebration Tower" என்றவணிக வளாகத்திற்குச் சென்றார். அப்போது படிக்கட்டில் ஏறும் போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...