நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கிணத்துக்கடவு பேரூராட்சியில் விறுவிறு வாக்குப்பதிவு..!

கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படுகிறது.

மேலும், வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து, வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கான ஆதாரங்களை காண்பித்து வாக்கு இயந்திரத்தில் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.



காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...