திருப்பூரில் நடு ரோட்டில் வெடித்து தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு..!

காரில் கேஸ் சிலிண்டர் இணைக்கப்பட்டிருந்ததால் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் வெடித்து தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது அல்டோ காரில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவர் திருப்பூர் லட்சுமி திருமண மண்டபம் அருகில் வந்தபோது திடீரென காரில் சப்தம் எழுந்துள்ளது.



இதையடுத்து, சந்திரசேகர் அதை பார்க்க முற்பட்டபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் காரில் இருந்து வெளியேறி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளார்.



ஆனால், காரில் பொருத்தப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் பெரும் சப்தத்துடன் வெடித்ததால் அனைவரும் காரை விட்டு ஓடி தப்பித்தனர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி எரிந்து சேதமானது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் உரிமையாளர் சந்திரசேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீப்பிடித்து எரிந்த காரில் காருக்கு பொருத்தும் கேஸ் சிலிண்டர் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...