கோவை தனியார் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை உடை அணிந்து கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு, குத்தாட்டத்துடன் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேலாண்மை கல்லூரி சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி மேலாண்மை கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். 

கல்லூரி வளாகத்தில் அடுப்பு மூட்டி சர்க்கரை பொங்கல் வைத்த மாணவ, மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கிராமங்களில் உள்ளதை போன்று கரும்பு ஜூஸ், பஞ்சுமிட்டாய், பதநீர், நொங்கு போன்ற பாரம்பரிய உணவு வகைகள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில், மாணவ, மாணவிகள ஜமாப் வாத்திய இசைக்கு ஏற்ப ஆட்டம், பாட்டத்துடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் ஒன்றாக படிப்பை மட்டுமே மையமாகக் கொண்டு கலாச்சாரத்தினை மறந்து வரும் நிலையில் தமிழக கலாச்சாரம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தெரிவதற்காக தமிழ் முறைப்படி பொங்கல் கொண்டாடுவதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். 

பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, கரும்பு கடிக்கும் போட்டி, மண்பாணையில் ஓவியம் வரையும் போட்டி என பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் படித்து வருவதால் பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...