கோவை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கோவை வடவள்ளியை அடுத்த, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை வடவள்ளியை அடுத்த, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், வடவள்ளி அடுத்த, பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழகத்திற்குட்பட்ட, வார்டு எண் 41, 74, மற்றும் 75 ஆகிய வார்டுகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், அனைத்து பாக முகவர்களுக்கும், தேர்தல் குறித்து, ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களின் பெயர் அடங்கிய குறிப்பேடுகளை வழங்கி, வீடு வீடாக வாக்காளர்கள் கணக்கெடுக்கும் பணியினை விரைந்து செய்திட அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மூன்று வார்டுகளைச் சேர்ந்த 380 வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...