பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது

பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை பலாத்கார வழக்கில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை பலாத்கார வழக்கில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணிற்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது உறவினர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு மண்ணூர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்(39), பெயிண்டிங் தொழிலாளி, அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானது தெரிய வந்தது.

இதையடுத்து, பாலசுப்பிரமணியம் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...