பதிவுத்துறையில் அரசால் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கோவை: பதிவுத்துறையில் அரசால் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின், வளர்ச்சிக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தமிழ்நாடு, பத்திரப்பதிவு துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்வதைத் தடுப்பது பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்வது உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய சட்ட திட்டங்களை வகுத்து தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதற்காகத் தமிழக அரசுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் அடுத்த ஆடிஸ்வீதி பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, தேசிய துணைத் தலைவர் எப்.ஒ.பி, செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ துறைகளில் முறையான மனை பிரிவுகளுக்கான அங்கீகாரம் பெற்றும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் சாலைகள், உட்பட பொது, பயன்பாடுகளை, தான பத்திரம் மூலம் ஒப்படைத்தும், முறையான கட்டணம் செலுத்தி, இறுதி ஒப்புதல் பெற்றும், விற்பனை செய்து வந்த வீட்டு மனை பிரிவுகளை, வழங்கி வருகின்றோம்.
முறையான கட்டட திட்ட அனுமதி பெற்றும், கட்டுமான பணிகளை மேற்கொண்டு, விற்பனை செய்த, மற்றும் செய்து வருகின்ற தனி வீடுகள், அனைத்தும் தற்போது, திடீரென தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், ஆகியோர்களின் பரிந்துரை கடிதத்தின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பரிந்துரை கடிதத்தின் பேரில், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து உத்தரவு பெறாததால், பதிவுத்துறை சட்டப்பிரிவு 22, ஏ, க்கு எதிராகப் பத்திரப்பதிவு செய்வதற்குத் தடை விதித்திருக்கிறது.
அதேநேரம் 500-சதுர மீட்டருக்கு கீழ் உள்ள மனைகளையும், 8 யூனிட்டுக்கு, கீழுள்ள வீடுகளையும், முழுவதுமாக முடிவு பெற்ற திட்டங்களையும், பதிவு செய்ய விலக்கு அளித்து இருக்கின்றது. பதிவுத்துறையின் இந்த செயலுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் மனவருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.