குன்னூரில் ஹெலிகாப்டர் பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நஞ்சப்பசத்திரம் விடுவிப்பு

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. விபத்து ஏற்பட்டு 18-நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்பசத்திரம் பகுதி சீல் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.


கோவை: குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் உதிரிப்பாகங்கள் அகற்றப்பட்டு கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சீல் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் கிராமம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8-ம் தேதி ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14-பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஏர்மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விபத்து ஏற்பட்ட பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டரின் சிறிய பொருட்கள் உடைத்துக் கொண்டு செல்லப்பட்டன. ஹெலிகாப்டரின் பெரிய பாகங்களை உடைக்காமல் அப்படியே கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எலக்ட்ரிக் ரோப் மூலம் இன்ஜின் உட்பட பெரிய பாகங்களை அப்புறப்படுத்தி லாரிகளில் ஏற்றி கோவை அருகே சூலூர் விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றனர்.

நேற்று அந்த பகுதியில் சீல் அப்புறப்படுத்தப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அங்கிருந்து சென்றனர். கடந்த 18-நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டிலிருந்த நஞ்சப்பசத்திரம் பகுதி சீல் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...