சகோதரிக்குக் கொடுத்த நிலத்தை அபகரிக்கப் போலி கடன் பத்திரம் தயார் செய்து தள்ளாத வயதில் பெற்றோரைப் பரிதவிக்க விடும் மகன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
திருப்பூர்: சகோதரிக்குக் கொடுத்த நிலத்தை அபகரிக்கப் போலி கடன் பத்திரம் தயார் செய்து தள்ளாத வயதில் பெற்றோரைப் பரிதவிக்க விடும் மகன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆதாரம் பாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்பிரமணியன் (78) இவரது மனைவி பூவாதாதாள்( 67) இவர்களுக்கு துரைசாமி என்ற மகனும் வசந்தாமணி என்ற மகளும் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், மகன் துரைசாமி 20 ஆண்டுகளாகப் பெற்றோரைக் கவனிக்காமலிருந்து வந்துள்ளார். அப்போது இவர்களின் மகள் வசந்தா மணி மட்டும் தனது பெற்றோருக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
சுப்பிரமணிக்குச் சொந்தமாக சேவூர் கூட்டப்பள்ளி பிரிவு அருகே 2-ஏக்கர் நிலம் உள்ளது. தனது காலத்திற்குப் பிறகு இருவருக்கும் தலா ஒரு ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார். ஒரு கோடி மதிப்புடைய நிலத்தைச் சகோதரிக்குக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மகன் துரைசாமி, புலிப்பார் பகுதி கிராம நிர்வாக அலுவலராக உள்ள தனது மனைவி கல்பனா மற்றும் மைத்துனர் நடராஜன் உடன் இணைந்து 10-லட்சம் கடன் வாங்கியதாகப் போலி ஆவணம் தயார் செய்து தனது பெற்றோரை மிரட்டி வந்துள்ளார்.

மேலும் நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் தினமும் தங்களிடம் சண்டையிட்டு தொல்லை கொடுத்து வருவதாகவும், தனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுத்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் முதிய தம்பதியர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்தனர்.