பெரியம்மாவை நகைக்காக கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2016 ஆம் ஆண்டு கடனை அடைக்க தனது பெரியம்மாவை கொலை செய்து 7 பவுன் நகையை திருடிய குற்றத்திற்காக, ரவி பிரகாஷ் என்பவருக்கு இன்று கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியை சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர் 2016 ஆம் ஆண்டு கடனை அடைக்க தனது பெரியம்மாவை கொலை செய்து 7 பவுன் நகையை திருடிய குற்றத்திற்காக, இன்று அவருக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கோவை ஆனைமலையை சேர்ந்த ரவி பிரகாஷ், என்பவர் தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்று முதலீடு செய்தும், தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். 

எனவே, கடனை அடைக்க வேண்டும் என முடிவு செய்த ரவிபிரகாஷ், 2016 ஆம் ஆண்டு தனியாக இருந்த தனது பெரியம்மா அருக்காணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை திருடி விட்டு, அந்த நகையை அடமானம் வைத்து ரவிபிரகாஷ் கடனை அடைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் 2018 ஆம் ஆண்டு ரவிபிரகாஷை கைது செய்தனர். வங்கியில் அடமானம் வைத்திருந்த திருடிய நகைகளை, மீட்டெடுக்கும் போது ரவி பிரகாஷ் காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று ரவிபிரகாஷூக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...