பொள்ளாச்சியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு; ஆனைமலை போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையத்தில் சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையத்தில் சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையம் கோபால்சாமி என்பவரது வீட்டில் பொங்கல் விழாவுக்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தோட்டத்து சாலையில் வெள்ளை அடித்துக்கொண்டிருந்த கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த வசந்தி (45) என்ற பெண் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

உடனே, தோட்டத்தின் உரிமையாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின் பேரில், வசந்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தி, இன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...