கோவை சிங்காநல்லூர் அருகே பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து விபத்து..!

பின்னர், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனம் தீப்பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சூரியபிரகாஷ் (24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சூரிய பிரகாஷ் பைக்கில் தீப்பிடித்தது. லேசாக பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்தது. இதையடுத்து, பைக்கை பெட்ரோல் பங்கின் ஓரமாக சூரியபிரகாஷ் தள்ளிவிட்டார்.

பிறகு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், தீ கட்டுப்படாமல் இருந்தது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பைக் முழுமையாக எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...