திருப்பூர் மாவட்ட கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கியில் மட்டும் 70 வணிக தொடர்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வங்கியின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது அவர்களுடைய பணியாக இருந்து வருகிறது.

முதியோர் உதவித்தொகை விநியோகம் செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிகளின் ஊதியம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளில் இருப்பிடத்திற்கே சென்று இவர்கள் வழங்கி வருகிறார்கள்.



இந்நிலையில், இவர்கள் அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதன்படி, தமிழக அரசின் ஓய்வூதிய பணம் வழங்க அரசு 30 ரூபாய் வங்கி வழங்குகிறது எனில், அதில் 20 ரூபாய் எங்களுக்கு வழங்க வேண்டும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து வங்கி சேவையை வழங்கிய எங்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட பரிவர்த்தனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...