கோவை மாவட்டத்தை புறக்கணிக்கும் இரயில்வே துறையை கண்டிக்கிறோம் - பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் ரயிலை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.



கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் ரயிலை இயக்க வேண்டும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய ரயில்வே கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செலயாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில்: பல்வேறு போராட்டங்களுக்கு பின் திண்டுக்கல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும், கோவை வழியாக ரயில்களை இயக்க ரயில்வே துறை மறுத்து கோவையை புறக்கணித்து வருகிறது. இதற்கு உதாரணமாக, திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க கோரிக்கை வைத்தும், பாலக்காட்டில் இருந்து அந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

எனவே, ரயில்வே துறையையும், அதனை ஆளும் மத்திய அரசையும் கண்டித்து இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க கோரிக்கை வைக்கிறோம், என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக, தமுமுக உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...