திருப்பூர் அருகே நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேலும், அதிகாரியின் உத்தரவை மூன்று ஆண்டுகளாகியும் பின்பற்றாத சுங்கச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பாளையம் அருகே நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் பகுதியில் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை அகற்றக்கோரி வட்டாட்சியர் உத்தரவிட்டும் தற்போது வரை அகற்றாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில் இன்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தெற்கு வட்டம் அவிநாசி பாளையம் பகுதியில் நீர்நிலை குட்டையை ஆக்கிரமிப்பு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே 2018ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் கோட்டாட்சியர் ஆகியோரிடம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அதே 2018ம் ஆண்டு திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சார்பில் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை 15 தினங்களுக்குள் அகற்றக்கோரி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்த போதிலும் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதாகவும் கூறி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நீரிலேயே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக அகற்றுவதோடு மட்டுமல்லாமல் அதிகாரியின் உத்தரவை மூன்று ஆண்டுகளாகியும் பின்பற்றாத சுங்கச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...