கோவையில் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை..!

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கை ரேகைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காளப்பட்டி அடுத்த பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் கணேஷ் என்பவரின் மகன் கிறிஸ்டோபர் (29). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சோமனூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சென்றுவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் வளையல்கள், 7 பவுன் தங்க டாலர்கள், 4 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கமல் மற்றும் 3 பவுன் நெக்லஸ் ஆகியவை உள்ளிட்ட 18 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கிறிஸ்டோபர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கை ரேகைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...