திருப்பூரில் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்குவதாக அரசு மருத்துவர் மீது புகார்..!

போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெறுவதாக போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்கி வருவதாக அரசு மருத்துவர் மீது ஆதாரத்துடன் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நரம்பியல் மருத்துவர் சிவக்குமார் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களிடம் லஞ்சம் பெற்று மாற்றுத்திறனாளி சதவீத சான்றிதழ் வழங்கி வருவதாகவும், லேசான மாற்றுத்திறனாளிகளுக்கும் 500 ரூபாய் முதல் லஞ்சமாக பெற்று 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதனால் உண்மையான பயனாளிகள் தவிர்த்து ஏராளமானோர் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், உண்மையான பயனாளிகளுக்கு சான்றிதழ் தர மறுத்து வருவதாகவும், லஞ்சம் கொடுத்துப் பெறும் சான்றிதழ்கள் மூலம் இடைத்தரகர்கள் உட்பட பலர் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெற்று வருவதாகவும், நந்தகுமார் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லாத நிலையில் போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும் போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...