கோவையில் லாட்டரி விற்ற மூவர் கைது..!

மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் லாட்டரி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கே.கே. புதூர் காமராஜர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தொடர்ந்து இப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (40) மற்றும் கோவை இடையர் வீதிப் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ராஜசேகர் (31) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடை பகுதியில் தொட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பழனிசாமி என்பவரின் மகன் மோகன்ராஜ் (33) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...