கோவையில் குட்கா விற்றதாக ஒரே நாளில் 25 பேர் மீது வழக்குப்பதிவு..!

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவை: கோவை நகரில் ஒரே நாளில் 25 பேர் மீது குட்கா விற்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். பெரியகடைவீதி பகுதியில் நடத்திய சோதனையில் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற பரணி(28) என்பவர் மீது குட்கா பொருட்கள் விற்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல ஆர்எஸ் புரம் போலீசார் கார்த்திகேயன் (51) என்பவர் மீதும் வரைட்டி ஹால் ரோடு போலீசார் சிபுசங்கர் (25), சந்தோஷ்குமார் (36) என்பவர்கள் மீதும், உக்கடம் போலீசார் உதயகுமார் (48) என்பவர் மீதும், காட்டூர் போலீசார் நிசாருதீன் (24) என்பவர் மீதும், சாய்பாபா காலனி போலீசார் ஆண்டியப்பன்(60) என்பவர் மீதும், கணபதி (67), சுரேஷ்(65), காலேஷ் (40) மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இரத்தினபுரி போலீசார் ராஜா (50), முத்துப்பாண்டி (59), கிஷோர் (50) ஆகியோர் மீதும், ராமநாதபுரம் போலீசார் ஜெரால்டு வின்சன்ட் (40), ஆறுமுகம் (42) ஆகியோர் மீதும், செல்வபுரம் போலீசார் வீரமணி (60), திருமுருகன் (36) பாண்டியன் (35) ஆகியோர் மீதும், போத்தனூர் போலீசார் சதீஷ் கண்ணன் (34) என்பவர் மீதும், குனியமுத்தூர் போலீசார் துரை (57), ஹர்ஷித் (40) பிரசன்னா (30) ஆகியோர் மீதும், பீளமேடு போலீசார் சுப்ரமணியன் (46) என்பவர் மீதும், சரவணம்பட்டி போலீசார் பாண்டியன் (28), மணி(54) ஆகியோர் மீதும் போலீசார் குட்கா பொருட்களை வைத்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை நகரில் ஒரே நாளில் 25 பேர் மீது குட்கா விற்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...