கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல்: கோவை மாவட்டத்தில் 4ம் கட்ட ஆய்வு இன்று தொடக்கம்..!

இன்று தொடங்கும் ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் குறித்து கண்டறியும் 4ம் கட்ட ஆய்வு இன்று தொடங்குவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது குறித்து கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவா்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றால் குறித்து கண்டறியும் 4ம் கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.

ஏற்கெனவே நடைபெற்ற 3 ஆய்வுகளில் 42 இடங்களில் தலா 30 போ் வீதம் 1,260 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 4ம் கட்ட ஆய்வில் 52 இடங்களில் 1,560 பேரிடம் ஆய்வு செய்யவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக புதிய கிளஸ்டா்கள் உருவாகியுள்ளன. இதனால், தற்போதைய ஆய்வில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படும். பின் கிளியா மெஷின் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, மாநில சுகாதாரத் துறைக்கு முடிவுகளின் விவரங்கள் அளிக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதல் கட்ட ஆய்வில் 22.5 சதவீதம் பேருக்கும், 2 ஆம் கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேருக்கும், 3 ஆவது கட்ட ஆய்வில் 44 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...