மேலும், கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறப்பு முகாம்கள், மெகா தடுப்பூசி முகாம்கள், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடா்பாக சுகாதாரத் துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-
ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டார சுகாதார அலுவலா், ஊராட்சித் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்று அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, ஊராட்சித் தலைவா்கள், வட்டார அலுவலா்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.