கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - கேரளா கல்லூரி மாணவன் பலி..!

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் கேரளா கல்லூரி மாணவன் பரிதாபமாக பலியானார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன் பாறா பகுதியைச் சேர்ந்தவர் அப்பாய்விக்கி, கூலித் தொழிலாளியான இவருக்கு அமல்(23) என்ற மகன் உள்ளார். இடுக்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நண்பர் பிரதீப் உடன் கோவையில் புதிய செல்போன் வாங்க இருசக்கர வாகனத்தில் அமல் வந்து கொண்டிருந்தார்.

இதனிடையே, கிணத்துக்கடவு கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது கோவையில் இருந்து வந்த கார் ஒன்று அமுல் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த அமுல் மற்றும் பிரதீப் பலத்த காயமடைந்தனர் பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுல் உயிரிழந்தார். அவரது நண்பர் பிரதீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...