கோவையில் பரபரப்பு..! வீடுகளை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்..!

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த அம்சா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பத்தாண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், தற்போது அவர்களை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் இருக்கிறது. ஆனால் இதுவரை மின்சார வசதி மற்றும் அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை. இலவச வீட்டுமனை பட்டாவும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி அதிகாரிகள் மிரட்டுகின்றனர் நோட்டீஸ் ஓட்டுகின்றனர். தங்களுக்கு வேறு இடம் தருவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அந்த இடம் வனப்பகுதிக்குள் இருப்பதால் தங்களால் செல்ல இயலாது.



எனவே, தாங்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் வசித்து கொள்கிறோம். எங்களை காலி செய்ய கூறவேண்டாம் என தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...