கேரளாவில் ஒமிக்ரான் பரவல் எதிரொலி: பொள்ளாச்சி - கேரள எல்லைப் பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை..!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து பறவை காய்ச்சல் மற்றும் ஒமிக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த, பொள்ளாச்சி - கேரள எல்லைப் பகுதிகளில், அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையிலும், மாநில எல்லைகளில் வாகன கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில், பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



இதில், குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் முக்கிய வழித்தடங்களான மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், நடுப்புணி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி RTPCR பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த ஆவணங்கள் இல்லாத வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் கேரளாவில் பலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக கேரள எல்லைகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...