கோவை மாநகராட்சியில் ரூ. 6 கோடி மதிப்பில் 10 புதிய தார் சாலை பணிகள்..!! அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..!

மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் மக்கள் பணியாற்றக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 6.01 கோடி மதிப்பீட்டில் தார் சாலை போடும் பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார்.



தொடர்ந்து சாலை பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் 6 கோடி மதிப்பில் 10 சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என்றார்.

கடந்த ஆட்சியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. மக்கள் சபை நிகழ்ச்சியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்தும், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் இருப்பது குறித்தும் பொது மக்கள் மனு அளித்தனர்.

இதனையடுத்து, முதல்கட்டமாக ரூ. 6 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மாநகரம் முழுவதும் சாலைகள் மேம்படுத்தும் பணி நடைபெறும்.



கோவை நகரில் மேம்பாலப் பணிகள் தொய்வடைந்து இருப்பதற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது தான். வழக்கு தொடுத்து இருப்பவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாலப்பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்காமல் செய்யப்பட்டதால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

செம்மொழி பூங்கா அமைப்பதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் சாலை, குடிநீர் வசதி போன்றவை இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் மக்கள் பணியாற்றக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா என்கிற கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...