வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை தேர்தல் ஆணையத்தின் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான இணையதளம் வாயிலாக போட்டிகள் நடக்க உள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவர்கள் மற்றும், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், சுவரொட்டி வரைதல், ஒரு வரியில் விழிப்புணர்வு வாசகம், பாட்டு, குழு நடனம், கட்டுரைப்போட்டி ஆகியவை மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்படும்.
மற்றவர்கள் மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் இணையதளமான, https://www.elections.tn.gov.in/ல் உள்ள எஸ்.வி.இ.இ.பி., போட்டி - 2022 என்ற
இணைய வழியின் மூலம் வரும் 31ம் தேதி வரை போட்டியில் பங்கேற்கலாம்.
இணைய வழியின் மூலம் வரும், 31ம் தேதி வரை போட்டியில் பங்கேற்கலாம்.வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, ரூ.5,000, இரண்டாம் பரிசு, ரூ.3,000, மூன்றாம் பரிசு, ரூ.2,000 என, பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்