கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் உட்பட 28 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..!!

மக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும், நீர் தேங்குவதைத் தடுப்பதின் வாயிலாக டெங்கு பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் உட்பட 28 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற, அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

தற்போது, அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 15 குழந்தைகள், 13 பெரியவர்கள் என 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும், நீர் தேங்குவதை தடுப்பதின் வாயிலாக டெங்கு பரவலை தடுக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது; யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை' என்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...