ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்களின் ‘மொற் பர்த்’ பண்டிகை கொண்டாட்டம்

ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்கள் ‘மொற் பர்த்’ பண்டிகையை கொண்டாடினார்கள். இதில் தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.



நீலகிரி: ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்கள் ‘மொற் பர்த்’ பண்டிகையை கொண்டாடினார்கள்.

ஊட்டியில் புத்தாண்டை வரவேற்கும் தோடர் பழங்குடிகள் பண்டிகை "மொற் பர்த்" உதகை அருகே முத்தநாடு மந்தில் தோடர் இன மக்கள் ‘மொற்பர்த்’ பண்டிகையைக் கொண்டாடினர்.

மலை மாவட்டமான நீலகிரியில் வனப்பகுதிகளை ஒட்டி தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் ஆகிய ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தலைமை இடமாக முத்தநாடு மந்து கருதப்படுகிறது.

முத்தநாடு மந்தில் மாவட்டம் முழுவதும் 72 மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில், அல்லது ஜனவரி மாதத்தில் ‘மொற்பர்த்’ என்று அழைக்கப்படும் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டில் ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்தில் ‘மொற் பர்த்’ பண்டிகையைத் தோடர் இன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டிகையை முன்னிட்டு தோடர் இன மக்கள் விரதம் இருந்து, மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர்.

பின்னர் தோடர் இன மக்கள் மூன்போ கோவிலிலிருந்து ஊர்வலமாக அடையாள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் தரையை நோக்கி குனிந்து வழிபட்டனர்.

இதையடுத்து தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று பூசாரி மூலம் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவராக காணிக்கை மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.



அவர்கள் அனைவரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து மூன்போ கோவிலின் முன்பகுதியில் சுற்றி நின்றபடி தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு கோவிலுக்கு சென்றனர்.



அதனை தொடர்ந்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...