இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு விழா

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.



திருப்பூர்: இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.



இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-



தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒன்று ரூபாய் 5,000-வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சித்திரை 1 ஆம் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார்கள்.

தற்போது மீண்டும் தமிழ்ப் புத்தாண்டை திமுக தை 1 ஆம் நாள் என மாற்ற முயற்சிக்கின்றது. நமது பாரம்பரியம் சித்திரை மாதம் என்பதால் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் கொண்டாட வேண்டும்.

ஈவேராவின் சிந்தனைகளைக் கொளுத்தி போகி கொண்டாட வேண்டும். தமிழக அரசு ஓமைக்ரானை காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.

ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை எனச் சொல்லாமல் அரையாண்டு விடுமுறை என விடுமுறை அறிவித்துள்ளார்கள். திமுக தலைவராக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லத் தேவையில்லை.

ஆனால், முதல்வராக நிச்சயமாக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வரும். பிரதமரின் வருகையைத் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது. சுதந்திர தினத்தின் மஹோத்சவத்தை அந்தமானில் இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது.

கோவை மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற திமுக நினைக்கிறது. லாட்டரி மார்டின், காருண்யா உள்ளிட்டோருடன் கூட்டணி வைத்து செந்தில் பாலாஜியைக் களமிறக்கி உள்ளது.

பாசிச திமுக குறித்து நாம் தமிழர் உணர வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு இந்த விஷயத்தில் உறுதுணையாக நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...