கோவையில் கணவரை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி

கணவனைக் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் தொடர்பாக, மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


கோவை: கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா (36). இவருக்கு ரீனா (வயது 36) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தனர். இதனையடுத்து தனது சகோதரர் ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சகோதரி மாலா (42) துடியலூர் போலீசில் புகாரளித்தார்.

இந்நிலையில் ராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார் இறந்த ராஜாவின் மனைவி ரீனா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கணவனைக் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...