ஆழியாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஆழியாற்றில் உள்ள கவியருவியில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.


கோவை: பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஆழியாற்றில் உள்ள கவியருவியில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, ஆழியாறு பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தளங்களாக உள்ளன.

இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளாக உள்ளன.

இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும், தொடர் விடுமுறை காரணமாகவும் ஆழியாறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படை எடுத்தனர்.



ஆழியாறு சென்ற சுற்றுலாப் பயணிகள் பலரும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவி அருகில் சென்று ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவிலிருந்ததால் கவி அருவியில் ஏராளமான வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதேபோல ஆழியாறு பூங்கா, ஆழியாறு காற்றின் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஆழியாறு காவல் நிலைய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...