திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், பொள்ளாச்சி அருகே காங்கேயம் காளை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி அருகே காங்கேயம் காளை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் அழிந்துவரும் காங்கேயம் காளைகள் வளர்ப்பு குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நாட்டின காளைகள் அபிவிருத்தியை அதிகப்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
போட்டியை திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

நிர்ணயிக்கப்பட்ட 300 மீட்டர் தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்த காளைகளை ஆரவாரத்துடன் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.