குறு-சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் உறுதி

கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு-சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதியளித்துள்ளார்.


கோவை: கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு, சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதியளித்துள்ளார்.

லகு உத்தியோக பாரதி தேசிய இணை பொது செயலாளர் மோகனசுந்தரம், தேசிய துணை தலைவர் ஹரிஹரன், மாநில தலைவர் விஜயராகவன், மாநில இணை பொது செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய குழு நேற்று முன்தினம் டில்லியில் குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான அமைச்சகத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே அவர்களை சந்தித்து குறு, சிறு நிறுவனங்களுக்கான தற்போதைய முக்கிய கோரிக்கையான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தி சிறு தொழில் வளர்ச்சி கழகம் மூலம் அரசு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்றது.

மேலும், கடன் சார்ந்த முதலீடு மானியம் (சி.எல்.சி.எஸ்.எஸ்), வட்டி சமநிலை திட்டங்களை கால நீட்டிப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான விலை மாறுபாடு விதி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மேலும் முக்கியமான கோரிக்கைகளை அமைச்சர் மற்றும் துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும் இதை கவனமுடன் கேட்டு கொண்டு ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் தமிழகம் வருமாறு மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் அதற்கு இசைந்துலகு உத்தியோக பாரதி அமைப்பின் சார்பில் வரும் மாதங்களில் கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு, சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள உறுதி அளித்திருக்கிறார்கள்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...