கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 8.79-கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 8.79-கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆர்.சுந்தர் கூறியதாவது:- கொரோனா ஆரம்பமான 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை கோவை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்து 19 குழந்தைகள் உள்ளனர். இதில் 18 குழந்தைகளை அவர்களது உறவினர்கள் பாதுகாத்து வருகின்றனர். ஒரு குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 12 குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்புநிதி அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 7 குழந்தைகளுக்கு விரைவில் பணம் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாவட்டத்தில் ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள் 777 பேர் உள்ளனர். இவர்களில் வறுமைக் கோட்டிற்கு மேல் 78 குழந்தைகள் உள்ளன. மீதமுள்ள 699 குழந்தைகளில் 273 குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் வைப்புநிதி அவர்களது வங்கிக் கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கு நிதியானது விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாகக் கோவை மாவட்டத்திற்கு 8.79 கோடி ரூபாய் குழந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 51 குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோர்களால் பராமரிக்க முடியாத குழந்தைகள் இங்கு உள்ளனர். அவர்களுக்கு உணவு கல்வி அடிப்படைத் தேவைகள் என 18 வயது வரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 410 ஆண் குழந்தைகளும், 651 பெண் குழந்தைகள் என மொத்தம் 1061 குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கின்றனர்‌.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...