போலி கணக்கு எழுதி 5-கோடி ரூபாய் கோழிப் பண்ணையில் மோசடி கேரளா தம்பதிக்கு போலீஸ் வலை

போலி கணக்கு எழுதி 5-கோடி ரூபாய் கோழிப் பண்ணையில் மோசடி செய்த கேரளா தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: போலி கணக்கு எழுதி 5-கோடி ரூபாய் கோழிப் பண்ணையில் மோசடி செய்த கேரளா தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையை அடுத்த பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் எம்.எஸ்.என் ஹேட்செரீஸ் என்ற கோழி பண்ணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த குட்டி என்பவரின் மகன் பிரதீப் குமார் என்பவர் மண்டல மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தில் கோழி குஞ்சுகளை வாங்கி பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து வளர்த்து பின்பு அதனை விற்பனை செய்வது வழக்கம். மேலும் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான தீவனம், மருந்துகள் உள்ளிட்ட தேவையான பொருட்களையும் வாங்கி விற்பனை செய்வது நிறுவனத்தின் வழக்கமான பணிகளில் ஒன்று.

இது அனைத்தையும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரதீப்குமார் நம்பிக்கையுடன் செய்து வந்தார். இவரது மனைவி பிரமிளா இதே நிறுவனத்தில் உதவி அக்கவுண்டன்ட் ஆக கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணி செய்து வந்தார். இதற்காக நிறுவனத்தின் முதல் மாடியிலேயே இவர்களுக்கு நிறுவனம் சார்பில் வீடு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிறுவனத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தில் பணிபுரிந்த பிரதீப்குமார் பென்ஸ் கார் மற்றும் விலை உயர்ந்த வீடு உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தனர்.

அப்போது பிரதீப் குமார் மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் இணைந்து சந்தையில் கோழிகளை கூடுதல் விலைக்கு விற்று குறைவான தொகையில் விற்பனை செய்ததாக நிறுவனத்திற்குக் கணக்குக் காட்டி உள்ளது தெரியவந்தது. இதன்படி 5 கோடி கோடியே 63 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

கோழிக்குஞ்சுகள் வாங்கியது, கோழி தீவனம் விற்பனை செய்தது மற்றும் கோழிகளை அதிக விலைக்கு விற்று நிறுவனத்திற்குக் குறைவாகக் கணக்கு காட்டியது என்பன உள்ளிட்ட பல்வேறு மோசடிகளைச் செய்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தின் பொது மேலாளர் சிபில் அல்பேட்டா கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டிஎஸ்பி சேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதீப் குமாரும் அவரது மனைவி பிரமிளாவும் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதீப் குமார் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...