டெங்குகாய்ச்சலுக்கு கோவையில் சிறுமி பலி

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6-வயது சிறுமி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.


கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பாலு. இவருடைய மகள் ரித்திகா (6). இவருக்குக் கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காகக் கடந்த 22-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை குழந்தைகள் நலச் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...