தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பல்லடம் மாணவர்கள் சாதனை

டெல்லியில் நடைபெற்ற 59-வது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று பல்லடம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.


திருப்பூர்: டெல்லியில் நடைபெற்ற 59-வது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று பல்லடம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

காலில் சக்கரங்களை மாட்டிக் கொண்டு பறக்கும்போது மனதில் ஏற்படுகின்ற ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி போன்றவை வேறு எந்த வேலையிலும், விளையாட்டிலும் நமக்கு ஏற்படாது. அந்த உணர்வை நமக்குத் தரும் ஒரே விளையாட்டு ஸ்கேட்டிங்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தமூன்று பள்ளி மாணவர்கள் டெல்லியில் டிசம்பர் 11 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற 59 ஆம் ஆண்டு தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

பல்லடத்தில் சேர்ந்த ஷிஜினா, நிஸார் ஆகியோரின் சிறுமி8 ஆம் வகுப்பு படிக்கும் அஞ்சலா பர்வின்நிஸார் 5 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றுவரும் இந்த மாணவி இதுவரை மூன்று மாநில அளவிலான போட்டிகள் மற்றும் மூன்று தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களைப் பெற்று உள்ளார்.



மேலும் டெல்லியில் நடைபெற்ற போட்டியிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பல்லடம் தைச் சேர்ந்த முருகன் மற்றும் ராஜ்கல மகன் ஸ்ரீபிரணவ் 9 முதல் 11 வயது சப் ஜூனியர் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.

இதுவரை மூன்று முறை மாநில அளவிலான போட்டிகளிலும் இரண்டு முறை தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். பல்லடம் அருகே இயங்கி வரும் velocity இன்டர்நேஷனல் ரோலர் ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இந்த மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு உலக சாம்பியன் பட்டத்தைப் பெறவேண்டும் என தெரிவித்துள்ளனர்.



மேலும் தமிழகத்தில் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள பயிற்சி எடுக்கும் வகையில் இதுவரை சென்னை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் கோவை வ.உ.சி பூங்காவில் மட்டுமே இரண்டு இடங்களில் மட்டுமே பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வாரியாக ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டால் ஏழை மாணவர்களும் சாதனை புரிய உறுதுணையாக இருக்கும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் இந்த விளையாட்டு என்பதை உடைத்தெறிந்து பாமரன் வீட்டுப்பிள்ளைகளும் உற்சாக வானில் ஊர்ந்து செல்ல தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...