வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் 16-குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அரசு மருத்துவமனையில் அதிகாலை 12-மணியிலிருந்து பிறந்த 16-குழந்தைகளுக்கு 500-கிராம் அளவில் தங்க மோதிரம் கோவை மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பாஜகவினர் தங்க மோதிரம் வழங்கினர்.



முன்னாள் பிரதமரான வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பாஜக வினர் உட்பட பல்வேறு கட்சியினர் வாஜ்பாய் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

அவரது படத்திற்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வாஜ்பாயின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக்கோவை மாவட்ட பாஜக கட்சியின் அமைப்புசாரா தொழிற்சங்கம் மற்றும் பொற்கொல்லர்கள் பிரிவினர் அரசு மருத்துவமனையில் அதிகாலை 12-மணியிலிருந்து பிறந்த 16 குழந்தைகளுக்கு 500-கிராம் அளவில் தங்க மோதிரம் வழங்கினர்.



பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மோதிரத்தை வழங்கினார். இந்நிகழ்வில் அப்பிரிவின் மாவட்ட தலைவர்கள் ஜகன்,புவனேஷ்வர் உட்படக் கோவை மாவட்ட பாஜகவினர் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...