கோவையில் தனியார் மோட்டார் நிறுவன ஊழியர் ரூ.16 லட்சம் மோசடி; பீளமேடு போலீசார் விசாரணை

புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வரதராஜன் என்பவர் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சந்தோஷ் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் விஜயகுமார் (51) ஜெனரல் மேனேஜர் ஆக பணி புரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்த்த போது, மோட்டார் உதிரிபாகங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு அதற்குரிய பணம் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்த கோவை லைட் ஹவுஸ் ரோடு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து, அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விஜயகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வரதராஜன் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...