ஈஷாவில் அகஸ்தியர்‌ ஜெயந்தியை முன்னிட்டு யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி..!

இந்த சப்தரிஷி ஆரத்தியானது சிவன்‌ தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள்‌, அவரது அருளைப்‌ பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும்‌.


கோவை: ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்துக்கு அகஸ்தியர்‌ ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது.



இகற்காக, காசி விஸ்வநாதர்‌ கோவிலில்‌ இருந்து 7 உபாசகர்கள்‌ ஈஷாவிற்கு வருகை தந்தனர்‌. அவர்கள்‌ யோகேஸ்வார லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர்‌, வில்வம்‌, மலர்கள்‌ போன்ற பல்வேறு மங்கள பொருட்களால்‌ லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர்‌.



படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன்‌ அவர்கள்‌ நிகழ்த்திய அந்த செயல்முறை சக்தி நிலையில்‌ பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில்‌ உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8 மணி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து ஆதியோகி திவ்ய தரிசனமும்‌, சயன ஆர்த்தியும்‌ நடைபெற்றது.



இந்த சப்தரிஷி ஆரத்தியானது சிவன்‌ தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள்‌, அவரது அருளைப்‌ பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும்‌.

இது வாரணாசியில்‌ இருக்கும்‌ புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்‌ கோவிலில்‌ பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆதியோகியில்‌ தான்‌ கடந்த 2017-ம்‌ ஆண்டு முதல்‌ ஆண்டுதோறும்‌ நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...