பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு ரயில் பயணிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்காடு கோட்டத்தை கண்டித்தும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும், கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம், திண்டுக்கல், தூத்துக்குடி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் உதயகுமார், ரகு, வேல்முருகன், திமுக நிர்வாகிகள் கதிர்வேல், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, கணேசன், ரூபன், கீதா கலைவாணி, லட்சுமணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் வித்யாசாகர், சிவராஜ், செந்தில், அறிவொளி வெள்ளிங்கிரி, கோபாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மருதாசலம், மணிகண்டன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கிணத்துக்கடவு சுப்பிரமணியன், கலைச்செல்வன், ஆதித்தமிழர் பேரவை சார்பாக வானுகன், தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...