ஓமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: கோவை-சிங்கப்பூர் இடையே விமானச் சேவை துவங்குவதில் சிக்கல்

கோவை-சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சர்வீஸ் துவங்குவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. டிக்கெட் புக்கிங் மட்டும் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கோவை: ஓமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி காராணமாக, கோவை - சிங்கப்பூர் இடையே விமானச் சேவை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நோய்த் தொற்று பரவல் அடுத்து சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தத் தடையானது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தற்போது வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனவே, கோவை விமான நிலையத்திலிருந்து 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் அந்நாட்டு விமானம் மட்டுமே வாரத்தின் அனைத்து நாட்களும் கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூருக்கு ஏற்கனவே விமான சர்வீஸ் வழங்கி வந்த 'Fly Scoot' ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் டிசம்பர் 28-க்கு பிறகு சர்வீஸ் துவக்கப்படும் என தகவல் வெளியானது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் திட்டமிட்டபடி இந்த விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், " கோவை -சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சர்வீஸ் துவங்குவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. டிக்கெட் புக்கிங் மட்டும் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், திட்டமிட்டபடி கோவை -சிங்கப்பூர் விமானச் சேவை மீண்டும் தூங்குவதில் சந்தேகம் உள்ளது. அந்த நிறுவனம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல் மட்டுமே இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்."

இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...