கோவையில் டாஸ்மாக் பாரில் பிறந்தநாள் கொண்டாட்டம்: இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு மண்டை உடைப்பு..!

சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் டாஸ்மாக் பாரில் பிறந்த நாள் கொண்டாடிய போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரகாஷ் (21). நேற்று இரவு பிரகாஷின் நண்பர் குப்புராஜின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர்.

இதனையடுத்து, மது அருந்திய பின்னர் நண்பர்கள் அனைவரும் குப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நுரை வரும் ஸ்பிரேவை நண்பர்கள் மீது தெளித்து உள்ளனர்.

அந்த சமயத்தில் பக்கத்து டேபிளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (38) மற்றும் அவரது நண்பர்கள் மீது தெறித்துள்ளது. இதையடுத்து இப்ராகிம் மற்றும் நண்பர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கத் துவங்கினர்.

பின்னர், பீர் பாட்டிலை எடுத்து பிரகாஷ் மற்றும் உடன் வந்திருந்த பிரபு தலையில் இப்ராகிம் உட்பட அவரது நண்பர்கள் அடித்துள்ளனர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடியது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பிரகாஷ் உடன் வந்திருந்த நண்பர்கள் இப்ராகிம் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாட்டில்கள் மற்றும் சேர் டேபிள்களை தூக்கி வீசினர். இதில் இப்ராகிம் உட்பட அவரது நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. நிலைமை கலவரமாகி போவதை அறிந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போர்க்களம் போல காட்சியளித்த அந்த இடத்தில் காயமடைந்து கிடந்த அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் இப்ராகிம் உட்பட 3 பேர் மீதும் இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் உட்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...