கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தலையீடு செய்ததாக திமுகவினர் கைது...!

கோவையில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது தலையீடு செய்ததாக 10 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது தலையீடு செய்ததாக 10 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகள், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, திமுகவினர் திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பேட்டியளித்த சீமான், திமுகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் ஏற்பட்ட சம்பவத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் துவங்குவதற்கு சற்று முன்பாக திமுக வை சேர்ந்த சிலர் அங்கு வந்துள்ளனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, நாங்கள் போராட்டம் நடத்த வரவில்லை. திமுக என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கிருந்து சென்றுவிடும்படி போலீசார் அவர்களிடம் வலியுறுத்தினர். அப்போது போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இதைத்தொடர்ந்து, போலீசார் திமுக வை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது.



இதில், பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியிலும், அதைத்தொடர்ந்து திமுக ஆட்சியிலும் கைதிகளை விடுதலை செய்யும் போது மதரீதியான பாகுபாடு காட்டப்படுகிறது. நாட்டில் மதத்திற்கு ஒரு சட்டம் கிடையாது. அனைவருக்கும் பொதுவான சட்டமே உள்ளது.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று திமுகவினர் நினைக்கின்றனர். அரசு நல்லது செய்தால் நாங்கள் வரவேற்போம். தவறு செய்தால் எதிராக கருத்து தெரிவிப்போம். எப்போதும் எதிராகவே கருத்து தெரிவித்துக் கொண்டிருக்க நாங்கள் என்ன மன நோயாளியா? பாஜக செய்வதையே திமுகவும் செய்கிறது என்று கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...