கோவையில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி: மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



கோவை: கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியரைக் கைது செய்யக் கோரி, கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில், சில ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாச வீடியோக்களை அனுப்புவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கோவை போத்தனூரில் அடுத்த வெள்ளலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் பணியாற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், வீடியோ காலில் வரச் சொல்லியும் புகைப்படங்கள் அனுப்பச் சொல்லியும் ஆபாச வார்த்தைகளால் புகைப்படம் அனுப்பினால் மட்டுமே இன்டர்னல் மார்க் தரப்படும் எனக்கூறி மிரட்டுவதாக அப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, மாணவிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே கணினி அறிவியல் ஆசிரியர் மாணவிகளுக்குத் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும், இரவு நேரங்களில் வீடியோ கால் வரச்சொல்லி உடைகள் இல்லாமலும், வீடியோ மற்றும் போட்டோ அனுப்பச் சொல்வதாகும், இல்லை என்றால் தங்களுக்கு வழங்கப்படும் இன்டர்னல் மார்க் குறைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் இது தொடர்பாகப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை பள்ளி தலைமை ஆசிரியர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஆசிரியருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் கடந்த சில நாட்களாகவே போக்சோ குறித்தும் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போன்றவை குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர்கள்.

தமிழக அரசு உடனடியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் போக்சோ வழக்குகள் குறித்தும் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் மற்றும் பேசுவது பழகுவது தொடர்பாக விழிப்புணர்வுகளை ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், பள்ளி மாணவர்கள் போராட்டத்தின் காரணமாகக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாகத் தலைமை ஆசிரியர், காவல்துறை, மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...