கோவையில் பரபரப்பு..!! மன வளர்ச்சி குன்றிய இரு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை முயற்சி..!

மகன்கள் இருவரும் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளதால் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மன வளர்ச்சி குன்றிய இரு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை. பிட்டர் ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் விக்னேஷ் (9), ஆகாஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மகன்கள் இருவரும் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இதன் காரணமாக யாராவது ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு ராமலட்சுமி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது சாமிதுரை தனது மகன்களுடன் வீட்டில் இருந்தார். சிறிது நேரம் கழித்து ராமலட்சுமி வீட்டிற்கு வந்தபோது சாமி துரையும் மகன்களும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டு மகன்களையும் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்ற மனவேதனையில் சாமிதுரை இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...